பிரதமர் நரேந்திர மோடிக்கு சாம்பியன் ஆப் த எர்த் விருது

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சாம்பியன் ஆப் த எர்த் விருது
x
* சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் இந்த சாம்பியன் ஆப் த எர்த் விருது வழங்கி ஐ.நா. கவுரவித்து வருகிறது.பிரதமர் மோடி தவிர பிரான்ஸ் அதிபர் மற்றும் கொச்சி விமான நிலையத்துக்கும் இந்த புகழ்மிக்க விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

* இந்த விருது அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது தனிநபருக்கு வழங்கப்பட்ட கவுரவம் அல்ல என்றும், பல நூற்றாண்டுகளாக உள்ள இந்திய பாரம்பரியத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தெரிவித்துள்ளார். 

* இயற்கையோடு இணைந்து வாழ நாம் பயிற்றுவிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மனித குலம் இயற்கையின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடங்கி உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்