சர்வதேச வர்த்தக கூட்டரங்கு அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

டெல்லியில், சர்வதேச வர்த்தக கூட்ட அரங்குக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
சர்வதேச வர்த்தக கூட்டரங்கு அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
x
இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு, 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் கூட்ட அரங்கை துவக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக துவங்கப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் அதிர்வுகள் ஏற்படும் என கூறினார். 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, இத்திட்டம் 80 கோடி இளைஞர்களின் அணுகுமுறை மற்றும் ஆற்றல் மையமாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். 

மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி



டெல்லியில், சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் கூட்ட அரங்கின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவுக்கு முன்னதாக, தவுலா குவான் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், ரயில் நிலையத்தை சுற்றிப் பார்த்தார். இதன்பின்னர், அங்கிருந்து துவார்கா பகுதிக்கு மெட்ரோ ரயிலில், பிரதமர் மோடி பயணம் செய்தார். அப்போது, அவருடன் மற்ற பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்