புதிய தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளையொட்டி புதிய தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புதிய தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
x
கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூய்மையே உண்மையான சேவை என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

காந்தியடிகளின் கனவை பூர்த்தி செய்ய வேண்டும் - மோடி



இதைத்தொடர்ந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடினார். நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் ரத்தன் டாடா, ஈஷா யோகா மைய இயக்குனர் ஜகி வாசுதேவ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் கூறினார். இதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டத்தில் இளைஞர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்த மோடி, அவர்கள் தான் சமூக மாற்றத்திற்கான தூதுவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி காந்தியடிகளின் கனவை நனவாக்க  வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்