இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்
x
இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. 

கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இந்த நிலையில் சீன ராணுவம் மீண்டும் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. 

கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் பகுதியில், 400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 முகாம்களை அமைத்துள்ளது. பின்னர், இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மூன்று முகாம்கள் அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள இரண்டு முகாம்களில் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்