கேரளா மழை வெள்ளத்தின் முதற்கட்ட ஆய்வில் ரூ.8,316 கோடி சேதம் என கணக்கீடு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பக் கோரியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா மழை வெள்ளத்தின் முதற்கட்ட ஆய்வில் ரூ.8,316 கோடி சேதம் என கணக்கீடு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்பக் கோரியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற்கட்ட ஆய்வில், 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார். சுமார் 20 ஆயிரம் வீடுகள் முழுவதுமாக இடிந்து சேதம் அடைந்து உள்ளதாகவும், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலை மழை வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார். 400 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும், இதுதவிர நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக 820 கோடி ரூபாய் வழங்க கோரியுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்