"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு?" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி

தேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு? - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி
x
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் 300 ஆசிரியர்களுக்கு அன்றைய தினம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுகள் எண்ணிக்கையை நடப்பாண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்துக்கு 23 ஆசிரியர்களுக்கு கிடைக்கும் விருது, இந்தாண்டு 2 அல்லது 3 பேருக்கு தான் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு இந்தாண்டு 6 ஆசிரியர்கள் தான் தமிழகத்தில் இருந்து பங்கேற்று உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தகுதியானவர்களுக்கு விருது வழங்கவும், தகுதியற்றவர்களை ஒதுக்கும் வகையிலும் மனிதவள மேம்பாட்டுத் துறை விருது எண்ணிக்கையை கணிசமாக குறைத்து உள்ளதாக கூறப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்