காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவதை தடுக்க புதிய வகை துணிப்பை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்
x
"பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்"

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டம், குளங்களை சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய முயற்சியாக பிளாஸ்டிக் பைகளை ஒழித்து அதற்கு பதிலாக துணிப் பைகளை பயன்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மகளீர் சுய உதவிக் குழுக்கள் மூலம் துணிப் பைகளை தைத்து, அதனை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கும் நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இப்பைகள் ஆறு அறைகளை கொண்டு பெரிதாக  இருப்பதால், பொருட்களை அதன் தன்மைக்கேற்ப தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம். 

இந்த வகை பைகளை தினமும் கடைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்துவிடும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உத்திரமேரூர் பேரூராட்சி செயல் தலைவர் கேசவன் என்பவர் ஊர் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய வகை துணிப் பைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகிறார்.

மக்களும் இந்த வகை துணிப் பைகளை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு பேரூராட்சியின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்