"வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து

நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளின் தரம் மிகவும் முக்கியம் என்றும், அதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து
x
நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் எழுதிய நூலின், தமிழ் மொழியாக்கம் நூல் வெளியீட்டு விழா மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பங்கேற்று நூலை வெளியிட அதனை மதுரை கிளை நிர்வாக நீதிபதி சி.டி. செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன், அனிதா சுமந்த், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வழங்கப்படும் தீர்ப்பில் தரம் தான் முக்கியம் என்றும், சமரசத்திற்கு எந்த இடமும் இல்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்