சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள்...

மேல்மலையனூரை அடுத்த சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள்...
x
குண்டும் குழியுமாக  காட்சியளிக்கும் சாலைகள்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ளது, சாத்தப்புத்தூர் கிராமம்... சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் உள்ள சாலைகளின் நிலை மோசமாக இருக்கிறது. குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுகின்றன. மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை...



முறையான சாலை வசதி இல்லை என்பது ஒரு பிரச்சினை என்றால், கிராமம் நெடுகிலும் பாயும் குறைந்த மின் அழுத்த மின்சாரம் மற்றொரு பிரச்சினை..சாத்தப்புத்தூர் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆகும் நிலையில், அன்றில் இருந்து இன்று வரை கம்பங்களுக்கு இடையேயான மின் வயர்கள் மாற்றப்படவில்லை.. இதனால் வயர்களின் கடத்தும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, அவ்வப்போது குறைந்த அழுத்த மின்சாரம் பாய்கிறது. இதனால் டிவி,ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை அடிக்கடி பழுதாகி விடுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 



அதுமட்டுமில்லாமல், குறைந்த அழுத்த மின்சாரத்தால் பாசனத்திற்காக மோட்டாரை இயக்கி நீர் பெற முடியவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதே சாத்தப்புத்தூர் கிராம மக்களின் குமுறலாக உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்