மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள்

விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணல் சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெற்றது.
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள்
x
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள் விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணல் சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள, மணவாளநல்லூர் பகுதியில் உள்ள மணிமுத்தாறு ஆற்றில் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அவர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் வாழை இலையில் மணலை கொட்டி சாப்பிடும் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். அவர்களை தடுத்த அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னர் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது. Next Story

மேலும் செய்திகள்