அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை - ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தகவல்

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை என ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவை அகற்ற உளவுத்துறை உத்தரவிடவில்லை - ஐஜி சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தகவல்
x
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இன்று ஆஜரானார். 

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது தளம் முழுவதும் உளவுத்துறை கட்டுப்பாட்டில் தான் இருந்ததாகவும், ஆனால் ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்கள் குறித்த விவரங்கள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த 75 நாட்களில் இதுதொடர்பான தினசரி குறிப்பும் பராமரிக்கப்படவில்லை என ஐஜி சத்தியமூர்த்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. உளவுத்துறை உத்தரவின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்படவில்லை என்றும் யாருடைய உத்தரவினால் அது அகற்றப்பட்டது என தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது என தனக்கு தெரியாது என அவர் கூறியபோது, உளவுத்துறை உயரதிகாரியாக இருந்துகொண்டு முதலமைச்சருடைய உடல்நிலை குறித்து தெரியாது என்கிறீர்களே என ஆணைய வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். அப்போதும் அவர் அதுபற்றி தனக்கு தெரியாது என்றே பதிலளித்ததாகவும் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அளித்த கருப்பு பூனை படைக்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என சத்தியமூர்த்தி கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்யும் விவகாரம் - செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்த அப்பல்லோ நிர்வாகம் 

அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆய்வு செய்யும் போது, செய்தியாளர்களை அனுமதிக்க முடியாது என அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்வது தொடர்பாக மருத்துவமனை வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஆணையத்திற்கு இன்று நேரில் சென்று, தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். முதலில் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்வதற்கு மருத்துவமனை தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டாயம் ஆய்வு செய்யபடும் என ஆணையம் தெரிவித்ததையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் ஆய்வுக்கு வருவது அவசியம் என ஆறுமுகசாமி கூறியதை அப்பல்லோ மருத்துவமனை இறுதியாக ஏற்றுக் கொண்டது. ஆனால் ஆய்வின் போது செய்தியாளர்களை அனுமதிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதையடுத்து ஆய்வு தொடர்பான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்