ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், செவிலியர் விளக்கம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் நளினி மற்றும் செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்..
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், செவிலியர் விளக்கம்
x
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முதலில் ஆஜரான மருத்துவர் நளினி, 2016 டிசம்பர் 5ம் தேதி, ஜெயலலிதாவுக்கு மூளையை தவிர மற்ற பிரதான உறுப்புகள் செயல் இழந்துவிட்டதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்கு பின் மூளையும் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்ட குறிப்பிட்ட நாளில் புதிய மருந்துகள் கொடுக்கவில்லை என்றும், குறிப்பாக மருத்துவமனையில் தனக்கு தெரிந்தவரையில் சசிகலா, ஜெயலலிதாவை பார்க்கவில்லை எனவும் மருத்துவர் நளினி தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆஜரான செவிலியர் பிரேமா ஆண்டனி, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற ஐசியு பிரிவு செவிலியர்களுக்கான கண்காணிப்பாளராக பணியில் இருந்ததாகவும், ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது தனக்கு தெரியாது என பிரேமா ஆண்டனி கூறியபோது, ஏன் அதனை நீங்கள் தெரிந்திருக்கவில்லை என ஆணைய வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். 

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள  தனக்கு விருப்பமில்லை என்பதால் அதில் ஆர்வம் காட்டவில்லை எனவும், செவிலியர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த மருந்துகள் மற்றும் மருத்துவ குறிப்புகளை மட்டுமே தான் பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தெரியாது என கூறும் நீங்கள், அவருக்கு அளிக்கப்படும் மருந்துகள் சரியானது தானா? என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் என ஆணையம் தரப்பில் கேட்ட போது பிரேமா ஆண்டனியிடம் பதில் இல்லை.

Next Story

மேலும் செய்திகள்