ம.பொ.சி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் - இல.கணேசன், எம்.பி., பா.ஜ.க
பாரத மாதா ஆலயம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும் ம.பொ.சி. பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனவும் பாஜக எம்.பி., இல கணேசன் தெரிவித்தார்.
ம.பொ.சி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்
ம.பொ.சி.யின் 113 வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பாஜக மாநிலங்களை உறுப்பினர் இல கணேசன், சமத்துவ மக்கள் கழகம் கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன் உள்ளிட்டோர் ம.பொ.சியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி., இல கணேசன், பாரத மாதா ஆலயம் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும் ம.பொ.சி. பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Next Story