சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது - நீதிபதி இந்திரா பானர்ஜி

சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது - நீதிபதி இந்திரா பானர்ஜி
x
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாலும், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் தீர்ப்பில் தரத்தை குறைத்து விடக் கூடாது என்றார். பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் நிகழ்வுகள், இருபிரிவினரிடையே மோதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சட்டப்பார்வையுடன் நீதிமன்றங்கள் அதனை அணு வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்