உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடக்கும் மலைவாழ் மக்கள்

பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திவந்த வழித்தடத்தை கேரள வனத்துறையினர் ஆக்கிரமித்ததால், தமிழக மழைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் ஆற்று நீரில், உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடக்கும் மலைவாழ் மக்கள்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பட்டி, கீழான வயல் என பல மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்துவரும் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாய் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக சம்பக்காடு பகுதி வழித்தடத்தையே நம்பியிருந்தனர். இந்நிலையில், திடீரென இந்த வழித்தடங்கள் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி கேரள வனத்துறையினர், சம்பக்காடு பாதைகளை கம்பிவேலி போட்டு அடைத்துவிட்டனர். இதனால், வழியின்றி தவித்து வந்த மலைக்கிராம மக்கள், 6 கிலோ மீட்டர் சுற்றி, கூட்டாறு வழியாக பயணித்து வந்தனர். தற்போது அந்த ஆற்றுப்பாதையும் அபாயகரமாக மாறி விட்டது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கூட்டாற்றில் வெள்ளம் ஏற்பட, வேறு வழியில்லாத மக்கள் ஆற்று நீரில் இறங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். 

ரேஷன் பொருட்கள் வாங்க முடியாலும், மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் மக்கள் தவிக்கின்றனர். சில சமயங்களில் , பச்சிளம் குழந்தைகளுடன் ஆற்று நீரை கடக்கும் நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். மக்களின் இன்னல்களை உணர்ந்து கூட்டாறு பகுதியில், அரசு மேல்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் , அல்லது கேரள வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பக்காடு வழித்தட்டத்தை மீட்டுத்தர வேண்டும் என்பதே  இவர்களின் கோரிக்கையாக உள்ளது...




Next Story

மேலும் செய்திகள்