புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பின் தங்கியுள்ளது.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம்
x
தொழில் வளர்ச்சியிலும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் 
முன்னலையில் இருந்த தமிழகம் இப்போது  பின் தங்கி உள்ளது.. 

2017ல் 3130 கோடி அளவிற்கு தமிழகத்தில் புதிய முதலீட்டு 
அறிவிப்புகள் வெளியாகின.   

இந்தியாவின் புதிய முதலீடுகளில் இது வெறும்  புள்ளி 7 9 சதவீதம் தான். 

 
ஆனால் கர்நாடகா 38 புள்ளி 4 8 சதவீத முதலீடுகளையும், குஜராத் 20 சதவீத முதலீடுகளையும், ஆந்திரா 7 புள்ளி 4 7 சதவீத முதலீடுகளையும் சென்ற ஆண்டு பெற்றன. 

2016இல் தமிழகம் 6172 கோடி அளவுக்கு புதிய முதலீட்டு திட்டங்களை பெற்றது. இந்தியாவின் மொத்த முதலீடுகளில் இது 1 புள்ளி 4 6 சதவீதமாக இருந்தது. 

இது 2013இல் 5 புள்ளி 1 7 சதவீதமாகவும், 
2014இல் 3 புள்ளி 6 சதவீதமாகவும், 2015இல் 6 புள்ளி 37 சதவீதமாகவும் 
இருந்தது. 2015இல் உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசுநடத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய முதலீடுகளுக்கான போட்டியில் தமிழகம் பின் தங்கிவிட்டது. 

ஆந்திரா, தெலுங்கானா, கர்னாடாக போன்ற அண்டை மாநிலங்கள் தமிழகத்தை முந்திச் சென்று விட்டன.

ஆனால் ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி இந்தியாவிலேயே மிக
அதிக எண்ணிக்கையில் தொழிற் சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்