கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் கொலை மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு வழங்குவதுடன்,  வழக்கு விசாரணையை சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என்றும்  கோரி இருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சண்டிகருக்கு வழக்கு விசாரணையை மாற்றுவது தொடர்பாக பதிலளிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், சிறுமியின் பெற்றோர் மற்றும் வழக்கறிஞருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

Next Story

மேலும் செய்திகள்