பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் - பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் இரங்கல்

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் மும்பையில் மரணமடைந்தார்.
பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் - பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் இரங்கல்
x
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூச்சு விட  சிரமபட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67. மறைந்த ரிஷிகபூரின் மனைவி  நீத்து சிங்கும் நடிகை ஆவார். அவர்களது மகன் ரன்பீர் கபூரும் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். மறைந்த ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா நடித்த பாபி திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

Next Story

மேலும் செய்திகள்