பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 53.
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
x
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இர்பான்கான் 1988 ல் மீரா நாயர் இயக்கத்தில் வெளியான சலாம் பாம்பே படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் ஆப் பை, பிகு உள்ளிட்ட படங்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. ஷோ க்கள் மூலமும் புகழ்பெற்றார். இவரது தாயார் சயீதா பேகம் உடல்நலக்குறைவால் கடந்த 25 ஆம் தேதி ராஜஸ்தானில் காலமானார். ஊரடங்கால் ராஜஸ்தான் செல்லமுடியாமல் தவித்த அவர், வீடியோ கால் மூலம் இறுதி சடங்கை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
தாயார் இறந்த சோகத்தில் மனவேதனை அடைந்த இர்பானுக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் நோய்த்தொற்று காரணமாக நிலைமை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், லண்டலில் சிகிச்சை பெற்று திரும்பி மீண்டும் படங்களில் நடித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

லைப் ஆப் பை, லன்ச் பாக்ஸ், ஜுராசிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். இர்பான்கானின் மறைவு திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்