பிகில் திரைப்படத்தின் டிரைலர் புதிய சாதனை - ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள்

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியான மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது
பிகில் திரைப்படத்தின் டிரைலர் புதிய சாதனை - ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள்
x
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வெளியான மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யூ டியூப்பில் வெளியான 3 மணி நேரத்திற்குள் 1 கோடி பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். மேலும் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இதன் மூலம் அதிவேகமாக 10 லட்சம் லைக் பெற்ற தமிழ் திரைப்படத்தின் டிரைலர் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளது. இதே போன்று பிகில் டிரைலரை கண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்,  வரூண் தவான், பிரபல இயக்குனர் கரன் ஜோகர், ஹாலிவுட் நடிகர் Bill Duke ஆகியோர் பாராட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்