ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி

தம்மை பற்றி சர்ச்சைகுறிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர்.
x
தம்மை பற்றி சர்ச்சைகுறிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ராதா ரவியும் ஒரு பெண்ணால் பெற்றெடுக்கப்பட்டவர் என்பதை நினைவு படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். இதுபோன்ற விமர்சன வார்த்தைகளால், ஊடகங்கள் தன் பக்கம் திரும்பும்படி ராதாரவி செய்துவருவதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எந்தவகையில் ராதாரவியை விமர்சிக்க கூடாது என தமது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ள நயன்தாரா, கடவுள் கருணையால் நல்ல படவாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, விஷாகா கமிட்டி போன்று நடிகர் சங்கத்தில் குழு அமைக்கப்படுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்