சர்கார் விவகாரம் : முருகதாஸை கைது செய்ய கூடாது என்ற தடை நீட்டிப்பு
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் படத்தில், அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாக குற்றம்சாட்டி, வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி ஏ.ஆர். முருகதாஸ் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை கைது செய்வதற்கான தடையை, டிசம்பர் 20-ஆம் தேதி வரை நீட்டித்தது. வழக்கு விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.
Next Story

