சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கம்

மறு தணிக்கை செய்யப்பட்ட 'சர்கார்' படம் இன்று மாலை திரையரங்குகளில் திரையிடப்படும்.
சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் நீக்கம்
x
சர்கார் படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. அதிமுகவினரின் எதிர்ப்பை அடுத்து, சில காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதனடிப்படையில் இன்று அந்த காட்சிகள் நீக்கப்பட்டு, மறு தணிக்கை செய்யப்பட்டது. மறு தணிக்கை செய்யப்பட்ட 'சர்கார்' படம் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மறு தணிக்கை செய்யப்பட்ட 'சர்கார்' படம் இன்று மாலை திரையரங்குகளில் திரையிடப்படும்

சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது என்றும், மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் படம், அடுத்த சில மணி நேரங்களில், திரையரங்குகளில் திரையிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



"சர்கார் படப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது" 

சர்கார் திரைப்பட பிரச்சினை சுமூகமாக முடிவடைந்துள்ளதாகவும், நீக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட காட்சிகளை தணிக்கை குழு நீக்கிவிட்டதாகவும் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.


சர்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் எவை..? எவை..?

சர்கார் படத்தில் கோமளவல்லி என்ற வார்த்தை வரும் இடங்கள் எல்லாம் ம்யூட் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் நெருப்புக்குள் மிக்சி மற்றும் கிரைண்டர்களை தூக்கி எறியும் காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இடம்பெற்றுள்ள பொதுப்பணித்துறை என்ற வார்த்தையும் ம்யூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்