நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய்
சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்கார் படத்தில் அரசியலிலேயே மெர்சல் பண்ணியிருக்கோம் என் தெரிவித்துள்ளார். மேலும் சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என கூறிய விஜய், மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை எனவும் மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும் எனவும் பேசியுள்ளார்.
Next Story