நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை

டிவி தொடர்களில் நடித்து வந்த பிரியங்கா என்ற நடிகை, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. சின்னத்திரை நட்சத்திரங்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை
x
சினிமாவுக்கு சவால் விடும் வகையில் மக்களை தன் பக்கம் ஈர்த்திருப்பது சீரியல்கள். பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சின்னத்திரைக்குள் வந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் சமீப காலமாக, தற்கொலை செய்து கொள்ளும் சின்னத்திரை நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...

டிவி தொகுப்பாளினியாக வாழ்க்கையை  தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக போராடி, பிரபல டி.வி. சீரியல் நடிகையாகி புகழ்பெற்ற பிரியங்காவும் தற்போது, தற்கொலை செய்து கொண்ட நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.  ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்த பிரியங்காவிற்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்,  அருண் என்ற கூடைப்பந்து வீரருடன் ரகசிய திருமணம் நடந்துள்ளது.. ஆனால், பிரியங்காவின் மண வாழ்க்கை சுமூகமாக இல்லை என்கிறார்கள். இதனால் கடந்த 2 மாதங்களாக, கணவரை பிரிந்து, சென்னை வளசரவாக்கத்தில் பிரியங்கா தனியாக வசித்து வந்தார். பெற்றோர், உறவினர்கள், கணவன் என எல்லா உறவுகளிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்ட பிரியங்கா சொந்தக்காலில் நிற்க முடிவு செய்தார். ஒரு மாதத்துக்கு முன்பு சொந்தமாக பியூட்டி பார்லரை தொடங்கினார் பிரியங்கா.  

தனியாக வாழ்வது தனிமை அல்ல, நம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையே தனிமை என்ற வரிகளை இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப்பின் முகப்புப் பக்கமாக மாற்றியிருந்தார் பிரியங்கா. இந்தநிலையில், வழக்கமாக 6 மணிக்கு எழுந்துவிடும் பிரியங்கா இன்று வெகுநேரமாகியும் எழாததால், பால் பாக்கெட் எடுக்கச் சென்ற அவரது பக்கத்து வீட்டுக்காரர், பிரியங்கா வீட்டு ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். உள்ளே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பிரியங்காவைப் பார்த்த அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.. பிரியங்காவின் இறப்புகான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
கடந்த காலங்களில், இதேபோல நடிகர் சாய் பிரஷாந்த், நடிகை ஷோபனா, ஏ.சி. முரளி, பிரதீப், சபர்ணா என பல சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்... 

தற்கொலைகளுக்கு உறவுச்சிக்கல், பணப்பிரச்சினை என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரே துறையில் தொடர்ந்து நடைபெறும் தொடர் தற்கொலைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன... 


Next Story

மேலும் செய்திகள்