12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது - 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
Published on
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 400 மாணவர்கள் பங்கேற்கின்றனர். சென்னையை பொறுத்தவரை, இரண்டு கட்டங்களாக இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. முதல் கட்டமாக இன்று துவங்கும் தேர்வில், 206 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 904 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டாம் கட்டமாக 204 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 528 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தொடர்ந்து, மார்ச்சில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com