கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Published on
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதாலும், கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவுவதாலும் அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிரையன்ட் பூங்கா, நட்சத்திட ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா வந்தவர்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர். கொடைக்கானலில் 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தங்குவதற்கு விடுதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com