சமீபத்திய செய்திகள்

EPS | AIADMK | "அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு கூடுதல் தொகுதி.. இதுதான்.." - சொல்லி அடித்த EPS

EPS | AIADMK | "அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு கூடுதல் தொகுதி.. இதுதான்.." - சொல்லி அடித்த EPS

thanthitv

EPS |AIADMK | "அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு கூடுதல் தொகுதி.. இதுதான்.." - மயிலாப்பூரில் நின்று சொல்லி அடித்த EPS அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்குப் பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கிரேன் மூலம் மாலை அணிவித்து, மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரச்சார வாகனத்தில் தமிழிசை சௌந்தரராஜன் சிறிது தூரம் பயணம் செய்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியை விட அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Petrol Price Hike | diesel | மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு..

Petrol and Diesel Price | 10 நாள்களில் பேரிடி இறக்கிய பெட்ரோல், டீசல் விலை மீண்டும் மீண்டும் உயர்வு

Chennai | TN Police | Child | பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்..சென்னையில் அதிர்ச்சி

Breaking | Chennai Police | சென்னையில் அதிரடியாக இறங்கிய போலீசார் | வளைத்து வளைத்து கைது

Summer Heat | Chennai | அடித்து விளையாடும் வெயில் - 13 இடங்களில் உச்சகட்ட தாக்கம்