விளையாட்டு

விளையாட்டு திருவிழா - 30.11.2018 -சுனாமி போல் உயர்ந்து எழும் அலை

விளையாட்டு திருவிழா - 30.11.2018 - பெண்கள் விரும்பும் சாகச விளையாட்டு

தந்தி டிவி

உலகின் மிக பரபலமான அலைச்சறுக்கு தொடர்களில் ஒன்று BIG WAVE NAZARE CHALLENGE. போர்ச்சுகல்லில் NAZARE கடற்பகுதியில் இந்த பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறும். ஹாலிவுட் படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளை போல், ராட்சச அலை வீரர்களை விழுங்க விடாமல் துரத்தும்.

ராட்சச அலைகளிலிருந்து தப்புவது சாதாரண காரியம் அல்ல.. அலைகளில் சிக்கினால் வீரர்கள் SURFING பலகையிலிருந்து தூக்கி வீசப்படுவார்கள். நடப்பாண்டில் நடைபெற்ற BIG WAVE NAZARE CHALLENGE கோப்பையை தென்னாப்பிரிக்க வீரர் GRANT BRAKER கைப்பற்றினார். சீறி எழுந்த அலை, அவரை விழுங்கியும், அவர் பலகையிலிருந்து கீழே விழாமல் இருந்தார்.

பல்லமான பகுதியில் இந்தப் பந்தயம் நடைபெறுவதால், வீரர்கள் ஆபத்தில் சிக்குவது அதிகம். உலகின் பிரபலமாளன இந்தப் போட்டியை மக்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து கண்டு களிப்பார்கள்.

பெண்கள் விரும்பும் சாகச விளையாட்டு

Human Water Catapult.. தண்ணீரில் நடைபெறும் சாகச விளையாட்டு தான் இது. தண்ணீரில் உள்ள மிதவையில் ஒருவர் குதிக்கும் போது, மறுபுறத்தில் இருப்பவர், தூக்கி வீசப்படுவார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விளையாட்டு, தற்போது அனைத்து தீம் பார்கிலும் இடம்பெற்றுள்ளது.

மேலிருந்து மிதவையில் குதிப்பவர்களின் எடை, வேகத்தை பொருத்தே, மிதவையில் இருக்கும் மற்றவர்களும் தூக்கி வீசப்படுவார்கள். இந்சத விளையாட்டு எப்படி உருவானது என்று உற்று நோக்கினால், அனைத்துக்கு பின்பும் இயற்பியல் காரணிகள் இருக்கும். இந்த பொழுதுப் போக்கு சாகச விளையாட்டால் விபத்துகளும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

குளிர்கால பிரதான விளையாட்டு கர்லிங்

கர்லிங் என்ற இவ்விளையாட்டு பனித் தரையில் நடப்பதாகும்.. பனித்தரையின் நடுவே, ஒரே மையத்தைக்கொண்ட நான்கு வளையங்கள் இருக்கும்.. குறிப்பிட்ட தொலைவில் இருந்து , வழுவழுப்பான கிரானைட் கல்லை வளையத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.. வளையத்தின் மையத்தை, கிரானைட் கல் எவ்வளவு நெருக்கமாக அடைகிறதோ , அந்த அளவை வைத்து வெற்றிப்புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன..

கிரானைட் கல் வழுவழுப்பாக சென்று சேர, பனித்தரையை இரண்டு பேர் தேய்த்தொண்டே செல்வர்..இரண்டு அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் அணிக்கு நான்கு வீரர்கள் பங்குபெறுவர். இவ்விளையாட்டில் 8 கற்கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொருவருக்கும் 2 கிரானைட் கற்கள் ஒதுக்கப்படுகிறது.

'கர்லிங்' என்ற விளையாட்டு ஸ்காட்லாந்து நாட்டில் 16ம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்திலிருந்ததாக கருதப்படுகிறது. எனினும் கர்லிங் விளையாட்டின் முதல் உலக சாம்பியன்ஷிப் 1959 ஆண்டு தான் ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. தற்போது பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு அதிகம் பிடித்த விளையாட்டாக கர்லிங் மாறி வருகிறது.

கர்லிங் விளைாட்டு, 1998ம் ஆண்டு தான் ஒலிம்பிக் போட்டியில்

அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் குழுவினர், பெண் குழுவினர், கலப்பு குழுவினர் என எப்படி வேண்டுமானாலும் இவ்விளையாட்டில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்தது முதலே, ஆண்கள் பிரிவிற்கான கர்லிங் விளையாட்டில் கனடா நாட்டினர் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

பெண்களை ஈர்க்கும் "ஆக்வா ஜூம்பா" உடற்பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்கும், பெண்களை ஈர்க்கும் ஆக்வா ஜூம்பா உடற்பயிற்சி குறித்து ஒரு தொகுப்பு உங்களுக்காக...AQUA ZUMBA.. பெண்கள், குழந்தைகளை ஈர்க்கும் புதிய உடற்பயிற்சி முறை தான் இந்த AQUA ZUMBA..தரையில் ஆடும் ஜூம்பா நடனத்தை, தண்ணீரில் ஜாலியாக ஆடி பாடுவது தான் இதன் சிறப்பம்சமே..

தண்ணீரில் கை, கால்களை அசைப்பதே சற்று கடினம்.. ஆனால் எப்படி நடனமாடுவது என்று நீங்கள் கேட்கலாம்..?? நீச்சல் குளத்திற்கு வெளியே நிற்கும் பயிற்சியாளர், துள்ளல் போடும் இசைக்கு ஏற்ப நடனமாடுவார். அதனை தண்ணீரில் நிற்பவர்கள் ஆட முயற்சி செய்தாலே போதும்..

புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுவது தான் இந்த பயிற்சி..இதனை மேற்கொள்வதால், மன அழுத்தம் குறைவதுடன்,உடல் எடையும் குறைந்து, உடல் வழுவை மேம்படுத்தும்.

தண்ணீர் இடுப்பு அளவு தான் இருக்கும் என்பதால், இந்த பயிற்சியை மேறகொள்வதில் எந்த ஆபத்தும் இல்லை.. 60 நிமிடம் இந்த பயிற்சியை செய்தாலே 350 கலோரி குறைந்துவிடும்.

இந்த பயிற்சியின் விசஷமே நேரம் போவதே தெரியாது. இதனால் வெளிநாட்டில் சேர்ந்தவர்கள், தங்களது நண்பர்களுடன் குழுவாக இந்த பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி