உலகம்

``அடுத்த USஅதிபர் இவர்தான்..!'' வாழும் நாஸ்ட்ரடாமஸின் பகீர் கணிப்பு ...

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்பதை கணித்துள்ளார் அமெரிக்காவின் நாஸ்ட்ராடாமஸ்...யாருக்கு வெற்றி வாய்ப்பு?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

அமெரிக்க அதிபர் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படுபவர் தான் இந்த Allan Lichtman...

அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிப்பதில் கில்லாடி...

அந்த வகையில் எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போவது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்பா? அல்லது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசா என்பதைக் கணித்துள்ளார் Allan Lichtman...

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றி வரும் Allan Lichtman கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் தேர்தல் முடிவுகளைக் கணித்து வருகிறார்...

கடந்த 10 தேர்தல்களில் 9 முறை இவரது கணிப்பு உண்மையாகி இருக்கிறதென்றால் ஆலனின் பவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்...

2016ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி...2020ல் ஜோ பைடனின் வெற்றியையெல்லாம் சரியாக கணித்திருந்தார் Allan Lichtman...

அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் இப்போது வெற்றியாளராக கை காட்டியிருப்பது யாரைத் தெரியுமா?...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம் கமலா ஹாரிசைத் தான்...

இது ஜனநாயகக் கட்சிக்காரர்களைக் கொண்டாட்டம் அடையச் செய்துள்ளது...

ட்ரம்ப், கமலாவிடம் தோல்வியைத் தழுவுவார் என Allan Lichtman கணித்துள்ளதை குடியரசுக் கட்சியினர் முட்டாள்தனம் என கண்டித்து வருகின்றனர்...

அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலின் நாஸ்ட்ராடாமஸ் கணித்தது பலிக்குமா?அல்லது பொய்க்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்

Rape Case ``மன உளைச்சலில் பொய்யாக பாலியல் புகார்’’ - மாணவி குறித்து சென்னை போலீஸ் அதிர்ச்சி தகவல்

Thoothukudi | Girl Death | தூத்துக்குடி கொடூரம் | மாணவியின் உறவினர்கள் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்