இலங்கையில் ஐந்து பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொழும்பு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு எடுத்து வருவதாக, தெரிவித்துள்ளார். வீணான வதந்திகளை கேட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.