மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வைகை பூர்வீக பாசனப் பகுதி 3 மற்றும் 2 ல் உள்ள 5 கண்மாய்களுக்கு 14ந் தேதி முதல் 21 ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதர வைகை பூர்வீக பாசனப் பகுதி 2-க்கு 23ந் தேதி முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுபோல, வைகை பூர்வீக பாசனப்பகுதி ஒன்றை சேர்ந்த நான்கு கண்மாய்களுக்கு 28ந் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு, விரகனூர் மதகணையில் தண்ணீர் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.