உதகையில் கோடை கொண்டாட திரண்டுள்ள சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்கு சீசன் களைகட்டியுள்ளதால், விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் அங்கு குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர். ரோஜா மற்றும் தாவரவியல் பூங்காவில் அமர்ந்து, குழுவாக உணவு உண்டு, கூடிப் பேசி பொழுதை கழித்து வருகின்றனர். புதுமண தம்பதிகள் உள்பட ஏராளமானோர் உற்சாகமுடன் படகு சவாரி செய்கின்றனர். மேலும் பலர் ஆர்வம் காட்டி வருவதால், படகு இல்லம் முன்பு கூட்டம் நிரம்பி வழிகிறது. துடுப்பு, மிதவை, மோட்டார் படகுகளில் உற்சாக சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை ரசித்த வண்ணம் வலம் வருகின்றனர்.