திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியினரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சித்ரா என்ற பெண்ணுக்கு சில மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி, அப்பெண் தனது கணவருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.