தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.