திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே 9ம் வகுப்பு மாணவி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலை வீட்டருகே குப்பை கொட்டச் சென்ற அந்த மாணவி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை தேடியுள்ளனர். இதனையடுத்து உடல் முழுவதும் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.