மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், இளைஞர்களுக்கான அம்மா விளையாட்டு திட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், இரு பாலருக்கும் விளையாட்டு குழுக்கள் அமைத்து போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.