தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வளையபந்தாட்டத்தில் தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிக்கு ஊர் முழுவதும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 9 ஆம் வகுப்பு படித்துவரும் தரணி என்ற அந்த சிறுமி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான வளைய பந்தாட்டத்தில் பங்கேற்று, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான சிற்றிடையாநல்லூர் திரும்பிய மாணவி, அந்த ஊர் மக்கள், பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர வைத்து, மேளதாளங்கள் முழங்க, ஊர்முழுவதும் பவனி வந்தனர்.