புத்தாண்டையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரை அருகேயுள்ள சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்ததால் பக்கதர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் வனத்துறை அனுமதி மறுத்ததால் ஏமாற்றத்துடன் அவர்கள் காத்திருந்தனர். கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.