தமிழ்நாடு

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கிடைக்கும் பொள்ளாச்சி சந்தை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் வியாபாரிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கென உருவாக்கப்பட்ட சந்தை பொள்ளாச்சி சந்தை .

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் நடக்கிறது இந்த சந்தை. வியாபாரிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கென உருவாக்கப்பட்ட சந்தை இது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் ஆதரவோடு செயல்பட்டு வரும் இந்த சந்தையில் காய்கறிகள் உட்பட எல்லாமே மலை மலையாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக பொள்ளாச்சி சந்தை செயல்பட்டு வருகிறது. மலைகிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பூண்டு, வெங்காயம், தக்காளி என எல்லாம் இங்கு கிடைக்கிறது.

சீரகம், மிளகு போன்ற மசாலா பொருட்களை இங்கு 10 ரூபாய்க்கு பாக்கெட்டிலும் வாங்கிச் செல்லலாம். மாத மளிகைச் சாமானாக மொத்தமாக வாங்கிச் செல்வோரும் இங்கு உண்டு. வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் நடக்கும் இந்த சந்தையில் இரவு வரை விற்பனை களைகட்டும். காய்கறிகளை பொறுத்தவரை இயற்கையாக விளைவிக்கப்பட்டது என்பது தான் இந்த சந்தைக்கு வரும் மக்களுக்கு நிறைவைத் தரும் ஒரு விஷயமாக இருக்கிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்