ஊட்டி மலை ரயில் பாதையில் இருபுறமும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் மலை ரயிலில் செல்லும் பயணிகள், செல்ஃபி எடுத்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில், ரயில் பாதையில் மல்லிகை, முல்லை மலர்கள் மணப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.