தமிழ்நாடு

தமிழகத்தில் 227 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் : இணைப்புக் கட்டணம் செலுத்தாததால் நடவடிக்கை

பல்கலைக்கழக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 227 கல்வியியல் கல்லூரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

* தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 700 கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

* இந்த கல்லூரிகள், பல்கலைக்கழகத்திற்கு இணைப்புக் கட்டணமாக 75 ஆயிரம் ரூபாயை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.

* இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்தவில்லை என்றால், 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்படி, கடந்த அக்டோபர் 31ஆம் தேதியுடன் இக்கல்லூரிகள் தங்கள் இணைப்புக்கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும்.

* ஆனால், தற்போது வரை 227 கல்வியியல் கல்லூரிகள் இணைப்புக் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி, அந்த கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி