நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏற்கனவே இருதரப்பாக பிரிந்து கிடக்கும் திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்ட, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மோதல் வலுத்தது. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானதால் அங்கு பரபரப்பு நிலவியது.