தமிழ்நாடு

`MY V3 Ads' ஓனர் பாமக பிரதிநிதிக்கு கொலை மிரட்டல் - அதிரடி காட்டிய போலீஸ்

தந்தி டிவி

யூடியுப்பில் விளம்பரம் பார்த்தால் பணம் தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களை கவர்ந்து பெருமளவில் முதலீட்டினை ஈர்த்த நிறுவனம் மைவி3 ஆட்ஸ். இந்த நிறுவனம் மோசடி நோக்கில் வாடிக்கையாளர்களை கவர்ந்து ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டது. புகாரை கண்டித்து நிறுவனத்துக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் கோவையில் நடத்திய போராட்டம் தமிழகம் முழுவதும் பேசு பொருளானது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளரான அசோக் ஸ்ரீநிதி என்பவர், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில், மைவி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் உள்ளிட்ட மூவர் மீது கோவை மாநகர போலீசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்