மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நாகூர்அனிபா, தனது மனைவியை கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து சிலைமான் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக பணியிலிருந்த சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்துள்ளார். இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சார்பு ஆய்வாளர் சரவணன், நத்தம் காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகூர்அனிபா சம்பந்தப்பட்ட கொலை வழக்கு விசாரணையின் போது சார்பு ஆய்வாளர் சரவணன் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வருகிற 9 ஆம் தேதிக்குள் ஆய்வாளர் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்