மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகை கோயில் திறக்கப்படாததால் இங்குள்ள குரங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் சின்னங்களை சில கட்டுப்பாடுகளோடு திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தும் இந்தக் கோயில் திறக்கப்படவில்லை. இங்கு வரும் மிகச் சில நபர்கள் கொடுக்கும் உணவை நம்பியே ஒரு குரங்குக் கூட்டம் உள்ளது. கோயில் திறக்காததால் இவை பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.