தமிழ்நாடு

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்குள் நேற்றிரவு கலால் துறை துணை ஆணையர் சம்பூர்ணம் மற்றும் 3 ஊழியர்கள் நுழைந்ததாகவும், 2 மணி நேரம் அங்கிருந்து விட்டு ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த திமுக கூட்டணி கட்சியினரும், அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 5 பேர், இச்சம்பவத்தை வீடியோ எடுத்தனர். அதை பார்த்த திமுக மற்றும் அமமுகவினர், அவர்களை சரமாரியாகத் தாக்கினர்.

மதுரை தொகுதி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றவர்கள் யார் ? - மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

"ஸ்ட்ராங் அறை பாதுகாப்பாக உள்ளது" -மார்க்சிஸ்ட் , அமமுகவேட்பாளர்

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்நிலையில் அங்கு காவல் துணை ஆணையர் சசிமோகன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பெண் அதிகாரி எதற்காக சென்றார் எனக் கேள்வி எழுப்பிய வேட்பாளர்கள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட அனுமதி கோரினர். இதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அந்தப் பெண் அதிகாரி வாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை நடந்த நிகழ்வுகள் அடங்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரிய வந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜனை சந்தித்து, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் அளித்தார்.

மதுரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி யார் ?

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி