தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைய்ப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

தந்தி டிவி

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிய ஒன்றிய அலுவலகங்களில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

* கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக குருந்தன்கோடு, மேல்புறம், திருவட்டார், தக்கலை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியத்திற்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலிருந்தும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பப்பட்டன.

* தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூா் ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சீட்டு, அழியாமை, எழுது பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.

* கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆயிரத்து 596 வாக்குச்சாவடி மையங்களில் நாளை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி 172 வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பல்வேறு இடங்களுக்கு வாக்குபெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்