#Krishnagiri #CrimeNews #TNPolice #ThanthiTV Krishnagiri | 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்து கொ*ல - இளைஞரை தேடி தூக்கிய போலீஸ்.. விசாரணையில் மற்றொரு பெண்ணையும்.. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போச்சம்பள்ளி அருகே குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, நேற்று காலை ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்... இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயது சூரியகுமாரைத் தேடினர். அவர் மற்றொரு பெண்ணிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தென்பெண்ணை ஆற்றங்கரை முள் புதரில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். தொடர்ந்து, போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரியகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.