காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.108 வைணவ தலங்களில் 63வது தலமாக விளங்கும் இந்த கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நெய்குப்பி கேசவராமானுஜ தாசர் சுவாமிகள் முன்னிலையில், விமானங்களில் பொருத்தப்பட்ட செப்பு கலசங்களின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.